யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிறீஸ்கந்தராஜா ஷேயந்தன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா (புன்னாலைக்கட்டுவன்), செல்வராணி தம்பதிகளின் ஏக புதல்வனும், உதயமூர்த்தி (Teacher, J/ Udupiddy American Mission College) ஹேமாலினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கீர்த்தனா (Software Engineer Enactor Ltd) அவர்களின் அன்புக் கணவரும்,உத்தரா அவர்களின் பாசமிகு தந்தையும்,சண்முகதாசன்(ஓய்வுபெற்ற முகாமையாளர் HNB), யோகேஸ்வரி, யுகேந்திரராசா, காலஞ்சென்ற தயாபரன், நந்தகுமாரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர் - யா/சென்ஜோன்ஸ் கல்லூரி), யசோதரா, காலஞ்சென்ற முரளிதரன், அனுசாதேவி(Director - Oru Paanai Trust), காலஞ்சென்ற பஞ்சரட்ணம், அமிர்தராணி(கனடா) ஆகியோரின் பெறாமகனும்,காலஞ்சென்றவர்களான Dr. இந்திராணி, சத்தியநாதன் மற்றும் லோகராணி, காலஞ்சென்ற பாலேந்திரன், விஜயராணி, காலஞ்சென்ற பத்மநாதன், யோகராணி, காலஞ்சென்ற வன்னியசேகரம், தர்மராணி, ஜெகநாகன், மகேந்திரன்(Engineer Botswana), கிருஜா(Accountant) ஆகியோரின் அன்பு மருமகனும்,தர்சனா(Bio Science, University of Jaffna), கஜானன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 31-08-2024 சனிக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் பி.ப 04.00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் இறுதிக்கிரியை 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்